பயங்கரவாதத்தை வேரறுத்த வீரத் தளபதி சவேந்திர சில்வா; சஜித் பிரேமதாஸ புகழாரம்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடி குடும்பத்துக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டமை வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியை முன்னெடுத்த வீர களத் தளபதிகளில் இவரும் ஒருவர்.

இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ. இராணுவத் தளபதி மீதான அமெரிக்க பயணத்தடை குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டபோதே அவர் இப்படிக் கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

தேவைப்படும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக நிற்கிறோம். ஒரு நாடு என்ற வகையில் 30 ஆண்டுகால பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்வீரர்களுடன் நாம் எப்போதும் நிற்போம்” என்று கூறியுள்ளார்.