அமெரிக்காவின் பாலஸ்தீன தீர்வுத்திட்டம்;இந்த நூற்றாண்டின் பாரிய திருட்டு

இன்றைய உலகின் ஆதிக்க சக்திகள் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான ஒரு உதாரணமே இப்போது ஐ-அமெரிக்காவும் இஸ்ரேயிலும் இணைந்து முன்வைத்துள்ள பாலஸ்தீன்-இஸ்ரேயில் பிரச்சனைக்கான தீர்வு திட்டம். இத்தீர்வு திட்டத்தில் பாலஸ்தீனத்தின் எவ்வித பங்களிப்பும் இல்லை. இதுபற்றி இப்பிரச்சனையை தொடர்ந்து அவதானித்து வந்த சிலரின் கருத்துக்கள் கீழே. குளேபல் ரிசேச் என்ற கனேடிய அரசியல் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

“இத்திட்டம் இஸ்ரேயில் ஆதிக்கம் செலுத்தும் பாலஸ்தீனப் பகுதிகளை அங்கீகரிக்கிறது. இவற்றில் பாலஸ்தீன பகுதிகளில் உள்ள இஸ்ரேயில் குடியேற்றங்கள், இஸ்ரேயில் இராணுவதளங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா இடங்கள், யூதர்களுக்கு மட்டுமான வீதிகள், சோதனை சாவடிகள் போன்றவை எல்லாம் அடங்கும்.”

000 1OM09A e1580561484166 அமெரிக்காவின் பாலஸ்தீன தீர்வுத்திட்டம்;இந்த நூற்றாண்டின் பாரிய திருட்டு

“இந்நூற்றாண்டின் திட்டம் என்று விபரிக்கப்படும் இத்திட்டம் இஸ்ரேயில் திருடிய நிலங்களை அங்கீகரிக்கிறது. நிலத்தின் ஆதிகுடிகளை நிலமற்றவர்கள ஆக்குகிறது.”

“புலம்பெயர் பாலஸ்தீனர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதை இத்திட்டம் தடுக்கிறது.”

“பாலஸ்தீன் நாடு என்று கருத்தற்ற ஒன்றை உருவாக்கி அதன் தலைவர்கள் எப்போதும் இஸ்ரேயில் சொல்வதை கேட்க செய்கிறது.”

“1917இல் பிரித்தானியாவின் “பல்ஃவோர்” (Balfour) பிரகடன் போல இதுவும் தங்களுக்கு சொந்தமில்லாதை ஐ-அமெரிக்க அதற்கு உரிமையில்லாதவர்களுக்கு கொடுக்கிறது.”

இது போல உலகில் பலரும் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். நாடுகளும் இதை எதிர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இருந்தும் ஆதிக்க சக்திகள் இக்கருத்துக்களை மதிக்குமா? ஒடுக்கப்படும் படும் மக்களின் ஒற்றுமை எத்துணை அவசியம் என்பதை இத்தீர்வு திட்டம் கோடிட்டு காட்டுகிறது.