வாகரையில் அத்துமீறல்; கேணிநகரை முஸ்லிம்களின் கிராமமாக மாற்றும் முயற்சி!

மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகமான அரச காணிகளும் மக்கள் பாவனைக்கு உட்படாத இடங்கள் காணப்படுவது வாகரை பிரதேச செயலகத்திலுள்ள கிராமங்களாகும் .

இங்கு அதிக அரச காணிகள் ஏன் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை இதில் விடுதலைப்புலிகள் முற்பட்ட காலம் பிற்பட்ட காலமான 2007 கிழக்கு படையினரின் கட்டுப்ட்டுக்குள் வந்தபின் என இரண்டு வகையில் பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் இருந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள மக்கள் அந்த காணிகள் தொடர்பில் எதிர்கால நோக்கோடு செயற்படாமல் போனது முதல் தவறு .

இரண்டாவது தவறு அரச கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதி வந்த போது பின் இங்கு அரச நிர்வாகத்தில் வந்த பின் பிரதேச செயலாளர் ,கிராமசேவையாளகள் பொதுத் திட்டங்களுக்கும் மற்றும் அங்குள்ள மக்களுக்கும் காணிகள் கிடைக்க நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாது,  அவர்கள் தமது  பங்கிற்கு தமது உறவினர் பெயரில் காணிகளை பதிவுசெய்து அதற்கு உடந்தையாக இருந்த முஸ்லீம்களுக்கு வழங்கினர்.

இப்பொழுது வாகரையில் தமிழ் தரப்பின் தனியார் காணிகள் கூட தமது காணிகள் என உரிமை கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டது .

மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் ஒரு அலுவலகமானது வாகரை பகுதியில் உள்ளதா?அப்படியொருவராவது தமது அலுவலகத்தை அமைத்து வாகரையை கண்காணித்திருந்தால் எத்தனை பிரச்சினைகள் முறைப்பாடுகள் நேரடியாக கண்டிருப்பார்கள்.

கடந்த திங்கட் கிழமை வாகரை வாழ் தமிழ்மக்களுக்கான அபிவிருத்தி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த பிரதேச செயலாளர் காணி அளவிட முற்பட்ட போது உடனே இச்செய்தி வாகரை கிராமசேவையாளர்களால் ஓட்டமாவடி குடியேற்றவாசிகளுக்கு காட்டுத் தீ போல பரவ அத்தனை பேரும் இது எங்களுடைய காணி என்று அதிலிருந்த அரச காணிகளை ஆதிக்கம் கொண்டாட பிரதேச செயலாளரும் சடுதியாக தாம் வந்த வழியே திரும்பி விட்டார்.

தமிழ்மக்களுக்கு ஏதாவது ஒரு அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்த ஒரு அரசகாணி சுவிகரிக்க முடியாமல் உள்ளது .இவ்வாறுதான் நிலைமை இன்று உள்ளது. இது இப்படியே நீடித்தால் பறிபோன தமிழர் நிலங்களுடன் மேலும் மேலும் மண்பறிப்பு நிகழ்ந்து தமிழர் வாழ்நிலையை கேள்விக்குறியாகிவிடும்.