உக்கிரேனின் போயிங் விமானம் ஈரானில் வீழ்ந்தது – 176 பேர் பலி

இன்று (8) காலை ஈரானின் தெகிரான் இமாம் கொமெனி விமானநிலையத்திற்கு அண்மையாக உக்கிரேன் நாட்டின் விமானம் ஒன்று வீழ்ந்து நொருக்கியதால் 176 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த அமெரிக்கத் தயாரிப்பு பயணிகள் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஈரான் விமான நிலையத்தில் இருந்து வானில் எழுந்த சிறிது நேரத்தில் இந்த விமானம் பரான்ட் பகுதியில் வீழ்ந்துள்ளது.

உக்கிரேனின் 752 இலக்கமுடைய விமானம் காலை 5.15 மணியளவில் ஈரான் விமான நிலையத்தில் இருந்து உக்கிரேன் தலைநகர் கியவ் இற்கு புறப்பட்டதாக உக்கிரேன் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

boing உக்கிரேனின் போயிங் விமானம் ஈரானில் வீழ்ந்தது – 176 பேர் பலிஇந்த விமானத்தில் 180 பேர் பயணம் செய்ததாக முன்னர் வெளியான தகவல்கள் தெரிவித்திருந்தன.

அமெரிக்காவின் போயிங் விமானம் அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் தற்போது அதன் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.