தையிட்டி சட்டவிரோத விகாரை: காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையில் இன்றைய தினம் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் தீவிர கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (09)  ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு, தங்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வதையே இப்போராட்டம் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனியார் காணி உரிமையாளர்களின் உரிமைகள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் உரிய உரிமையாளர்களிடம் உடனடியாக மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் உறுதியாக வலியுறுத்தி வருகின்றனர்.

விகாரையில் விசேட வழிபாடுகள் தொடரும் அதேவேளை, வெளியே மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றமான நிலைமை நிலவி வருகின்றது.