ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளக முரண்பாடுகள் நிலவும் ஒரு கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சியின் உள்ளக முரண்பாட்டுக்கு தீர்வு காணாவிடின் தேர்தலின் போது வேட்புமனுத்தாக்கல் செய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுதந்திர கட்சியின் பிரதான உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கட்சியின் முக்கிய தரப்பினர் வெள்ளிக்கிழமை (6) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
உஉட்பூசல்களை எதிர்நோக்கும் ஒரு அரசியல் கட்சி வரவிருக்கும் தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியாது.
உட்பூசல் உள்ள ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முயலும் போது, அதன் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி,சர்ச்சையைத் தீர்ப்பது தொடர்பில் உடன்பாட்டை எட்ட வேண்டும்.
சர்ச்சையைத் தீர்க்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட கட்சி அத்தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் வாய்ப்பை இழக்கக்கூடும் என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விவகாரத்திலும் முன்னோக்கிச் செல்லும்போது இதே நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு இதன்போது குறிப்பிட்டுள்ளது.



