இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த அக்.27-ம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கு 53 இடங்களும், காடி ஐசன்கோட் மற்றும் நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 48 இடங்களும், அரபுக் கட்சிக்கு 19 இடங்களும் கிடைத்தன.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில் எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆட்சி மாற்றம் வேண்டி காடி ஐசன்கோட்டுக்கு 67 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை அறிவிக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் இதனைக் கூறியுள்ளார்.
“ஆலோசனையில் நடந்தது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் யாருக்கு அரசாங்கம் அமைக்கும் திறன் உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டப்படி என்னிடம் உள்ளது. அரசியல் கூட்டணிகளுக்கு இடையில் நிலவும் விருப்பு வெறுப்புகளைப் பார்க்கும் போது இந்த விவகாரம் அவ்வளவு தெளிவாக இல்லை
சில அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியே அதை தீர்மானிப்பேன்” என்று ஐசக் ஹெர்ஸாக் தெரிவித்துள்ளார்.



