தம்பலகாமம் கால் நடை வளர்ப்பாளர்களின் மேய்ச்சல் தரை தொடர்பில் களவிஜயம்

திருகோணமலை மாவட்ட, தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை பண்ணை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் மேய்ச்சல் நிலங்கள் தொடர்பில் அம்மேய்ச்சல் நிலங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக, கடவானை அட்டவானை ஆகிய இடங்களை பார்வையிட  தம்பலகாம பிரதேச செயலாளர்  கே.சதிசேகரன்  அவர்களால் கள விஜயம் வியாழக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டன.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், காணி உத்தியோகத்தர் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண கால்நடை திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை பண்ணை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

அண்மைய காலங்களில் கால்நடை வளர்ப்பார்கள் தங்களது கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர். குறித்த கால் நடை வளர்ப்பாளர்களுக்கு சுமூகமான தீர்வை முன்வைப்பது குறித்தும் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினரின் களவிஜயம் அமைந்தது.