மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் திங்கட்கிழமை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, சேதமடைந்த வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாகக் தரப்பால்கள் வழங்கிவைக்கப்பட்டது.
முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று ஒழுங்குகளும் செய்து வைக்கப்பட்டது.



