இலங்கையின் பழைய அரசியல் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று புதன்கிழமை (21) ஆம் திகதி அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘நியூ விங்ஸ்’ (New Wings – அலுத் பியபத்) அமைப்பு மற்றும் பல இளைஞர் அமைப்புகள் இணைந்து இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
“வெள்ளையில் உடை அணிந்து, கறுப்பில் வருகை தருதல்” (Dressed in White, Coming in Black) எனும் கருப்பொருளின் கீழ் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் பிரச்சினைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளின் இரட்டைத் தரநிலைகளை ஏற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஊழல், இனவாதம், மத தீவிரவாதம், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வீசட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் ஊழல் நிறைந்த பழைய அரசியல் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்குவது தடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தி இளைஞர் செயற்பாட்டாளர்கள் வீதி நாடகமொன்றை அரங்கேற்றியதுடன், சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



