“குடியேற்றக் கொள்கைகளே காரணம்” – பிரான்ஸ் கலவரம் குறித்து ட்ரம்ப் விமர்சனம்

பிரான்சில் நடைபெற்று வரும் கலவரங்களுக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியேற்றம் தொடர்பான தனது அறிவுரையை மேக்ரான் கேட்டிருந்தால் இந்த வன்முறையைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,

“பாரிஸ் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும், இது சரியான ஒப்பந்தம் அல்ல. பெருமளவில் குடியேறிகளை பிரான்சுக்குள் அனுமதிப்பதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறீர்கள் என்று மேக்ரானிடம் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தேன். ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாரிஸ் நகரம் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறப்போகிறது” என்று கூறினார்.