ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலம் : பாராளுமன்றத்துக்கு இன்று சமர்ப்பிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.

நாடுகளுக்கிடையேயான ஒழுங்கடைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்துக்கு ஒத்துழைப்பளிப்பதற்கும், பயனுள்ள தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக பாரதூரமான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவும், புலனாய்வு செய்வதற்காகவும் மற்றும் அவற்றுக்கெதிராக குற்ற வழக்குகளைத் தொடுப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்,

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கும், அத்துடன் அவற்றோட தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களை நோக்கமாகக் கொண்டு  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.