மூன்று மாதங்களில் நடந்த மோதல்களில் 15 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

கடந்த இரண்டு நாட்களில் ஹார்முஸ் நீரிணை மற்றும் கருங்கடல் பகுதிக ளில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 12 இந்திய மாலுமிகள் காயமடைந்தனர்; இதில் செவ் வாய்க்கிழமை(6) ஓமன் அருகே தாக்கப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பலில் இருந்த 11 பேரும் அடங்குவர்.
பனாமா கொடியுடன் இயங்கும் ‘எம்டி ஆன் பீஸ்’ (MT On Peace) என்ற கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணை அல்லது பொருள் தாக்கியதில் சேதமடைந்தது. இக்கப்பலில் இருந்த 19 பேர் கொண்ட குழுவில் 12 பேர் காயமடைந்தனர்; அவர்களில் 11 பேர் இந்தியர்கள் (மொத்தம் 17 இந்தியர்கள் கப்பலில் இருந்தனர்). காயமடைந்த மாலுமிகள் ஓமன் அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டு, கசாப் (Khasab) பகுதியில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO), அக்டோபர் 6-ஆம் தேதி நிலவரப்படி, ஹார்முஸ் நீரிணை மற்றும் பரந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட 93 தாக்குதல்களை உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியா மற்றும் கருங்கடல் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த மோதல் தொடர்பான 57 கடல்சார் சம்பவங்களில் 15 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காணாமல் போயினர் என்று இந்தியாவின் கடல்சார் ஒழுங்குமுறை ஆணையம் ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது.
2026-ஆம் ஆண்டிற்கான BIMCO-ICS மாலுமி பணியாளர் ஆற்றல் அறிக்கையின்படி, 3,11,936 கடல்சார் நிபுணர்களுடன் (உலகளாவிய பணியாளர்களில் 12.16%) மாலுமிகளை வழங்கும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
செப்டம்பர் மாத இறுதியில், பாரசீக வளைகுடாவில் இயங்கும் வணிகக் கப்பல்களில் 4,500-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பணியில் இருந்தனர்.