புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பல முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பல முன்மொழிவுகளுக்கும் கொள்கைகளுக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவுடன் ஒக்டோபர் 09 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.