.அனோஜன் விவகாரம்: 4 பேர் கொண்ட இலங்கைத் தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்தார்.

நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி, இனங்களுக்கு இடையே பாரிய மோதல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சர்வதேச அழுத்தங்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று இன மக்களும் இதில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

அனைவரும் ஒன்றுபட்டுப் பயணிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தூண்டல்களை ஏற்படுத்தி மக்களைப் பலிகடாவாக்க முனையும் சக்திகளுக்கு இடமளித்துவிடக் கூடாது.

அரசியல்வாதிகள், யூடியூபர்கள், சமூக வலைத்தளக் கருத்துப் பரப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இயங்குபவர்கள் அனைவரும் தங்கள் சுயநல அரசியல் தேவைகளுக்காக இனங்களிடையே விரிசலை ஏற்படுத்த முற்படுகின்றனர்.

கடந்த காலங்களில் நாட்டில் பாரிய அசம்பாவிதங்கள் உருவாகாமல் அரசாங்கம் நுணுக்கமாகக் கையாண்டு கட்டுக்குள் கொண்டுவந்தது.

எனவே, மக்களிடையே விரிசலை ஏற்படுத்தத் துடிக்கும் சக்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாகக் கைக்கோர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கவிந்தன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.