ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வருபவர்களை குடும்பத்தினராக கருதி வரவேற்கும் மனப்பான்மை அதிகரிக்க வேண்டும் என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவருடன் பிரான்ஸ் அதிபர் மக்ரோனும் மெட்ஸ் நகருக்கு பயணித்தது குறிப்பிடத்தக்கது.
“போர் மற்றும் இன்னும் பிற துன்புறுத்தல் காரணமாக ஆண்கள், பெண்கள் என அதிகம் பேர் அடைக்கலம் தேடி செல்வதை நாம் காண்கிறோம். அண்மையில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் கேனரி தீவுகளில் அதிகளவில் புலம்பெயர்ந்திருந்தனர்.



