தாயகத்தில் எழுச்சியாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

IMG 20260926 WA0111 தாயகத்தில் எழுச்சியாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் இன்று சனிக்கிழமை (26) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலுள்ள இடத்தில் முதற்கட்டமாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது.

WhatsApp Image 2026 09 26 at 11.54.18 தாயகத்தில் எழுச்சியாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.