கொழும்பில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்!

இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடும் முக்கிய சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை (17) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த ஒன்றுகூடலில் பங்கேற்கும் அனைத்துத் தரப்பினரும் இணைந்து கூட்டு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடவுள்ளனர்.

இதேவேளை, குறித்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்கனவே முழுமையான இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.