பேரழிவு தந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளின் சுவடுகள் மறைவதற்குள், நேபாளத்தின் வடமேற்கு முஸ்தாங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (08) இரவு 5.3 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பூமியதிர்ச்சி கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இரவு 9:53 மணியளவில் ரிச்டரில் 5.3 ஆகப் பதிவான இந்த நில நடுக்கத்தின் மையம் முஸ்தாங் மாவட்டத்தின் லோமந்தாங் பகுதியில் அமைந்திருந்ததாக நேபாள தேசிய நில நடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மணாங், தோல்பா மற்றும் மியாக்டி மாவட்டங்களிலும் இந்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.



