புவிசார் அரசியல் மோதல்களில் சுயமோகத்தின் (Narcissism) தாக்கம் என்ன? -தமிழில்: ஆர்தீகன்

தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத் திலேயே, ‘அமெரிக்காவின் மகத்துவத்தைப் போற்றும் பெயர்களை மீட்டெடுத்தல்’ (Restoring Names That Honor American Greatness) என்ற நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி, மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) இனி ‘அமெரிக்கா வளைகுடா’ (Gulf of America) என்று அழைக்குமாறு கூட்டாட்சி முகமைகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
என்னது? அது எப்படிச் சாத்தியம்? அது அதோடு நிற்கவில்லை. ஆகஸ்ட் 27, 2026 அன்று, ஒன்ராறியோ ஏரியின் (Lake Ontario) அமெரிக்கப் பகுதிக்கு ‘அமெரிக்கா ஏரி’ (Lake America) என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றும் மற்றொரு நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அதெல்லாம் என்ன விபரீதம்? இந்த பைத்தியக் காரத்தனத்தின் அளவைப் பார்த்து நான் இன்னும் அதிர்ச்சி யில் உறைந்து போயிருக்கிறேன்.
சமீபத்தில் டிரம்ப் இப்படி எழுதினார்: “அந்த நீரிணை இப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹார்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) பெயரை ‘டிரம்ப் நீரிணை’ (STRAIT OF TRUMP) என்று மாற்றலாமா??? அமெரிக்காவைப் போலவே, அதுவும் முன்னெப்போதையும் விட ‘சூடாக’ (hotter) இருக்கும்!”
சிறிது நேரத்திற்குப் பிறகு, வெள்ளை மாளிகை யின் அதிகாரப்பூர்வ கணக்கு அந்தப் பதிவை ஆதரிக்கும் வகையில், புதிய பெயருடன் கூடிய வரைபடம் மற்றும் “இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது” (It has a nice ring to it) என்ற வாசகத்தைப் பகிர்ந்து கொண்டது. இந்த நிர்வாகத்தில் பகுத்தறிவு எங்கே இருக்கிறது? அமெரிக்க வரலாற்றின் வேறு எந்தக் காலகட்டத்திலும் இது போன்ற ஒரு பைத்தியக்காரத்தனம் சாத்தியம் என்று எந்தவொரு சிந்தனையாளரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
எதிர்வினைகளைத் திசைதிருப்ப எடுக்கப்பட்ட துணிச்சலான நடவடிக்கையாக இது இருக்குமோ? சில சமயங்களில் பென்டகன் (அமெரிக்கப் பாதுகாப்புத் துறை) குறிப்பிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதுண்டு, ஆனால் இங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை. உண்மையில் இங்கே ஒரு மனநலம் சார்ந்த சிக்கலே நிலவுகிறது.
இதை இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென் றால்: உயிருடன் இருக்கும் ஒருவரின் முகத்தை நாட்டின் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் அச்சிடக்கூடாது என்பது அமெரிக்கக் கூட்டாட்சிச் சட்டத்தின் நீண்டகால விதியாக இருந்து வருகிறது.
அப்படியிருக்க, தனது சுயமோக வெளிப்பாடுக ளில் ஒன்றாக டிரம்ப் என்ன செய்தார்? தனது முதல் பதவிக் காலத்தில் கையெழுத்திடப்பட்ட சட்டத்தில் இருந்த ஒரு ஓட்டையைப் பயன்படுத்தி அவரது நிர்வாகம் அந்தச் சட்டத்திற்குப் புதிய விளக்கம் அளித்தது. நாணயம் தயாரிக்கும் பிரிவின் (Mint) சட்ட விளக்கப்படி, அந்தத் தடை நாணயத்தின் பின்புறத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், எனவே முன்புறத்தில் டிரம்பின் முகத்தை அச்சிடலாம் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
இந்தத் தந்திரம் எனக்கு இன்னும் முழு மையாகப் புரியவில்லை; ஏனென்றால் உலகம் முழு வதும் நாணயத்தின் முன்புறத்தில் முகங்களும், பின்புறத்தில் எண்கள் மற்றும் மதிப்புகளும் (denominations) இடம்பெறுவது வழக்கம். அந்தப் பைத்தியக்காரர் அதைக் கூட மாற்றிவிட்டாரா? இது எனக்குள் ஒரு விசித்திரமான நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
வெனிசுலாவை ஆக்கிரமித்து அங்கு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய பிறகு, அதை அமெரிக்காவின் 51-வது மாநிலமாகக் காட்டும் வரைபடங்களை அவர் வெளியிட்டதைப் பற்றி யெல்லாம் நாம் பேசவே இல்லை.
ஆனால், இதையெல்லாம் பற்றி அமெரிக் கர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இத்தகைய மன நிலை நிலவும் சூழலில், ஆரம் பத்திலிருந்தே புள்ளிவி வரங்களையும் உண்மை களையும் திரித்துக்கூறிய ட்ரம்ப் ஈடுபட்ட ஒரு போரிலிருந்து எத்தகைய விளைவைத்தான் எதிர் பார்க்க முடியும்? அடுத்ததாகப் பதவியேற்கவிருக்கும் அதிபர் (அவர் ஜனநாயகக் கட்சியினரோ அல்லது குடியரசுக் கட்சியினரோ யாராக இருந்தாலும்), குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் எத்தகைய புவிசார் அரசியல் பாதிப்புகளைச் சரிசெய்ய வேண்டி யிருக்கும்? ட்ரம்ப் காலத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில், உலகப் பாதுகாப்பிற்கான அமெரிக்க மாதிரியை மீண்டும் மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறதா?
பாற்ரிசியா மரின்ஸ்
படைத்துறை ஆய்வாளர்