“எங்கள் காணிகளை உடனே வழங்கு” : கிளிநொச்சியில் போராட்டம்

“எங்கள் பாரம்பரிய காணிகளை உடனே எமக்கு மீள வழங்கு” என அரசை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (21) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய செயலகத்திற்கு முன்பாக A9 வீதியில் நடைபெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பின் (MSEDO) ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சிவில் சமூக பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மற்றும் இயக்கச்சி, கிராஞ்சி ஆகிய பகுதிகளில் காணிகளை இழந்த மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இப்போராட்டம் நடத்தப்பட்டது.