இலங்கையில் மாணவர்களைப் பாடசாலைகளில் தக்கவைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளதாகவும், குறிப்பாக 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் கல்வியை விட்டு விலகும் போக்குக் காணப்படுவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் ‘பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தின்’ இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், எதிர்வரும் ஆண்டு முதல் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் அங்கு குறிப்பிட்டார்.
அனைத்துப் முன்பள்ளிகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் எதிர்வரும் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.



