அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 175 நாட்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று இன்று (20) கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் ஓரா குழுவினரால் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



