வீரமுனையில் கோரப் படுகொலை! 36 ஆண்டுகளாகியும் நீடிக்கும் அவலம்! : பா.அரியநேத்திரன்

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொகுதியில் பூர்வீக அழகிய தமிழ் கிராமம் வீரமுனை. இந்த ஊருக்கு வடக்கே சொறிக்கல் முனையும் தெற்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் செழிப்பான வயல் நிலங்களும் அமைந்துள்ளன. வீரமுனை பகுதி தமிழ்மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். சம்மாந்துறைப் பிரதேசம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் தென் கடற்கரை யோரங்களிலிருந்து போர்த்துக்கேயரால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து குடியேறி வாழும் பிரதேசமாகும். இவ்விரண்டு பிரதேசங்களையும் இணைத்து சம்மாந்துறை நகரசபை அமைந்துள்ளது.
தொடர்சியாகவே முஸ்லிம்களால் இலக்கு வைத்து தாக்கப்படும் ஒரு தமிழ்க்கிராமமாகவே வீரமுனைக்கிராமம் இருந்தது. 1954ஆம் ஆண்டு தனிநபர்களுக்கிடையே நடைபெற்ற தகராற்றினால் சம்மாந்துறை முஸ்லிம்கள் ஒரு சிலரால் வீரமுனைப் பிரதேசம் தீயிட்டு எரிக்கப்பட்ட வரலாறும் உண்டு. இதனைத் தொடர்ந்து வீரமுனை மக்கள் இடம் பெயர்ந்து காடுகளில் கணபதிபுரம், வீரசோலை போன்ற புதிய கிராமங்களை உருவாக்கினார்கள்.
வீரமுனையில் 1990,ஆகஸ்ட் 12, கொடூரப்படு கொலைக்கு முன்னர் பல தமிழர்கள் பல வருடங்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்ட சம்பவங்கள் உண்டு.
(1)15.03.1985 சதாசிவம் சண்முகராஜா – கமம் 23 வயது.
(2)25.10.1985 சின்னத்தம்பி நவரட்ணராசா  – விவசாயம் 19, வயது.
(3) 08.09.1988 காளிக்குட்டி நவரெட்ணம் தொழிலாளி 23 வயது.
(4) 13.01.1989 சேதுமதி குணரட்ணம்- கமம் 33 வயது.
(5) 11.06.1990 கணபதிப்பிள்ளை கந்தசாமி – தொழிலாளி 27 வயது.
(6) 15.06.1990 பாலசந்திரபோஸ் சுபாஸ்சந்திரபோஸ் – தொழிலாளி 20 வயது.
(7) செல்லத்துரை விக்னேஸ்வரன் – கமம் 19 வயது.
(8) செலடன்ஸ்பெக் பிறிங்கேஸ்பெக் – தச்சுத்தொழில் 19 வயது
(9) சிவராசா சதீஸ்குமார் – 19 வயது. (10) சங்கரப்பிள்ளை சிவகுருநாதன் – மாணவன் 18 வயது.
(10). சவரிமுத்து ரஞ்சன் – கமம் 22 வயது.
(11) சற்குணநாதன் ரஞச்சிதகுமார் – வியாபாரம் 22 வயது.
1990 யூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இராணுவத்தினரால் வீரமுனைப் பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டது. சுற்றிவ ளைத்த இராணுவத்தினர் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை அருகிலுள்ள வீரமுனைப்பிள்ளையார் ஆலயத் திற்குச் செல்லுமாறு பணித்தனர். ஆலயத்திற்குச் செல்லாது வீடுகளிலிருந்தவர்களை இராணுவத்தினர் சுட்டுப் பின்னர் வீட்டுடன் சேர்த்து எரித்தார்கள் வீதிகளில் நடமாடிய பலரும் இராணுவத்தினரால் சுடப்பட்டார்கள், 20.06.1990 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு கனரக வாகனங்களில் வீரமுனைப் பிள்ளையார் கோயிலுக்கு வந்து இறங்கிய இராணுவத்தினர் வீரமுனைப் பிரதேசத்தில் பல பிரதேசத்திலுமிருந்து தஞ்சமடைந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சுற்றிவளைத்து பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் கோயிலின் பின் வீதியில் ஒன்று சேருமாறு பணித்தார்கள், இவர்களில் அறுபத்தொன்பது இளைஞர்களை உறவினர்களின் முன்னி லையில் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சம்மாந்துறையில் உள்ள மார்ஜன் பாடசா லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவர்களில் ஐம்பது பேர்வரை இராணுவத்தினரால் சம்மாந்துறையிலுள்ள மலைக்காட்டுக்குள் உயிருடன் எரிக்கப்பட்டனர். மிகுதிப் பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
29.06.1990 ஆம் திகதி மீண்டும் மக்கள் தங்கி யிருந்த கோயிலுக்கு வந்த இராணுவத்தினர் அங்கிருந்த வா்களில் பலரைக் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்து சென்றாா்கள். இவர்களில் எவருமே திரும்பி வரவில்லை. வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் தஞ்ச மடைந்தவா்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அச்சுறுத்தலிலிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்து காரைதீவு மகாவித்தியாலயத்தில் தங்கி இருந்தனர். அங்கு சுற்றி வளைத்த இராணுவத்தினர் பாடசாலையில் தங்கியிருந்தவர்களில் பதினொரு இளைஞர்களைக் கைதுசெய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென் றார்கள்.  இவர்களிலும் எவருமே திரும்பி வரவில்லை.
05.07.1990 மீண்டும் பாடசாலைக்கு வந்த அதிரடிப் படையினர் அங்கிருந்த இளைஞர்கள் பதின்மூன்று பேரைக் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். காரைதீவு மகா வித்தியாலயத்தில் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் சித்திர வதைகளின் பின்னர் உயிருடன் ரயர் போட்டு எரிக்கப் பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்களைத் தேடிச்சென்ற உறவினர்களும் இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளனார்கள். இதனைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் வீரமுனைக்கு அருகிலுள்ள அகதி முகாமிற்குத் திரும்பி னார்கள்.          10.07.1990. அன்றும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் பதினைந்து இளைஞர் களைக் கைதுசெய்து, இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அவர் களையும் உயிருடன் எரித்தார்கள்.
16.07.1990 அன்று வீரமுனை அகதி முகாமிலிருந்து தமது வீடுகளைப் பார்க்கச்சென்ற பெண்களில் எட்டு இளம்பெண்கள் மல்வத்தையிலிருந்த இராணுவ சோதனை நிலையத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு முப்பதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களும் இராணுவத்தினரால் பின்னர் எரிக்கப்படட்னர்.
26.07.1990 இல் மீண்டும் வீரமுனை அகதிமுகாமைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் முப்பத்திரண்டு இளை ஞர்களைக் கைது செய்தார்கள் இவர்களில் இருபத்துமூன்று பேர் பாடசாலை மாணவர்கள் இவர்களில் எவருமே திரும்பிவரவில்லை. 29.07.1990ல் வீரமுனைப் பிரதேசத்தில் தமது குடும்பத்தினருடன் பயணம்செய்து கொண்டிருந்த எட்டுப் பாடசாலை ஆசிரியர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள் இவர்களில் எவரும் திரும்பிவரவில்லை.
01.08.1990 ஆம் திகதி வீரமுனையிலுள்ள சவளக் கடை வீதி வழியாக நாவிதன் வெளிக்குச் சென்ற பதி னெட்டு பொதுமக்கள் இராணுவம், காவற்துறை மற்றும் ஊர்காவற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். இவர்க ளில் ஒரு குழந்தையும் நான்கு பெண்களும் அடங்கு வர். இவர்கள் அனைவரும் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களால் துண்டுகளாக வெட்டப்பட்டு சவளக்கடை கோயிலுக்குள் போட்டு எரிக்கப்பட்டார்கள்.
இதன்தொடர்சியாகவே பாரிய இனப்படுகொலை யானது ஜக்கியதேசிய கட்சி அரசின் ஆர் பிரமதாச ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையி னர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய கொடூர தமிழினப்படுகொலையாகும்.
1990 யூன் நாலாம் வாரம்  வீரமுனை அகதி முகாமிற் குக் கூரிய ஆயுதங்கள் துப்பாக்கிகளுடன் வந்த முஸ்லிம் குழு முகாமிலிருந்தவர்களை வெட்டியும் சுட்டும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் பத்துப் பேர் உயிரிழந்தார்கள், பலர் காயமடைந்தார்கள். உயிரிழந்தவா்களில் கோயில் அறங்காவலர் தம்பிமுத்து சின்னத்துரை, இரண்டு குழந் தைகள், மூன்று பெண்கள் உள்ளடங்குவார்கள்.
இந்த முஸ்லிம்களின் தாக்குதலில் காயப்படட்வர் கள் முதலில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்கள் அனுமதிக்கப்படவி ல்லை. பின்னர் அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் மூன்று பேர் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டார்கள். மிகுதி நான்கு பேர் வீரமுனைக் குத்தப்பிவந்தார்கள் .வீரமுனையில் அறுநூறு வீடுகளும் வீரமுனைக்கு அருகிலுள்ள கிராமங்களான மல்வத்தை, மல்லிகைத்தீவு, நியூரவுண், கணபதிபுரம், வளாத்தபிட்டி ,சம்மாந்துறை ஆகிய கிராமங்களில் ஆயிரத்து முந்நூற்று ஐம்பத்திரண்டு (1352) வீடுகளும் எரிக்கப்பட்டன.
1990,யூன் தொடக்கம் 1990.ஆகஸ்ட் வரை வீர முனை, காரைதீவு மற்றும் அயற்கிராமங்களிலுமாக இரு நூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள் அல்லது காணாமற் போனார்கள். இரண்டாயிரம் (2000) வீடுகள் வரை இராணுவத்தினரும், முஸ்லிம் குழுக்க்களும் இணைந்து எரித்தனர்.
சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன் செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 யூன் மாதம் முதல் யூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.
இக்காலகட்டத்தில்தான் 1990,ஆகஸ்ட்,12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 233 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.
இந்த கொடூரப்படுகொலையில் கொல்லப்பட்டோ ரில் கிடைக்கப்பெற்ற விபரம்
01 இளையதம்பி கண பதிப்பிள்ளை.
02 இளையதம்பி செல்லம்மா.
03 இளையதம்பி சின்னப்பிள்ளை.
04 இராசையா பரமேஸ்வரி.
05 இராசையா சுபாசினி-மாணவி 16 வயது.
06 இராமநாதன் வாணிதாசன்.
07 இராமக்குட்டி பொன்னம்மா – 65 வயது.
08 இராசலிங்கம் அழகையா
09 இருளாண்டி அமிர்தலிங்கம் – மாணவன் 20 வயது.
10 யு.நடராஜா – 5 வயது குழந்தை.
11 நாகலிங்கம் தியாகராசா – மேசன் 31 வயது.
12 நாகலிங்கம் தவராசா.
13 நாகலிங்கம் மாரிமுத்து .
14 நமசிவாயம் தேவராசா .
15 நடராஜா உதயகுமார் – 7 வயது சிறுவன்.
16 நடராசா இளங்கோ.
17 நடராசா கிருபைராசா- தொழிலாளி 39 வயது.
18 நல்லதம்பி தவராசா.
19 நல்லதம்பி கோபால்.
20 நல்லதம்பி வடிவேல்.
21 நல்லதம்பி விக்னேஸ்வரன்.
22 க.கறுவல்தம்பி.
23 க.மாரிமுத்து.
24 க.அழகையா.
25 கனகரெட்ணம் யோகராசா.
26 கனகசபாபதி இளங்கோ .
27 கந்தையா நவரட்ணம் .
28 கந்தையா கணேசமூர்த்தி .
29 கந்தையா கணபதிப்பிள்ளை.
30 கந்தையா திசாநாயகம்.
31 கந்தையா தருமலிங்கம்.
32 கந்தக்குட்டி. பாக்கியராசா.
33 கந்தக்குட்டி. தருமலிங்கம்.
34 கந்தசாமி விஜயகுமார்.
35 கந்தவனம். கந்தசாமி
36 கந்தவனம். குமார்.
37 கந்தவனம் ஆறுமுகம்.
38 கந்தவனம் சோமசுந்தரம்.
39 காத்தமுத்து நாகேந்திரன்.
40 காத்தமுத்து சண்முகநாதன் – கமம் 40 வயது.
41 காளிக்குட்டி உலகநாதன்.
42 கதிர்காமத்தம்பி கருணாகரன்.
43 கதிரேசப்பிள்ளை சந்திரசேகர்.
44 கதிராமத்தம்பி இராசையா.
45 கதிரவேலு இராசலிங்கம் -கமம்.
46 கதிரவேல் இராஜேந்திரன் –
47 கதிரவேல் ராதிகாகிருஸ்னன்.
48 குமாரன் சின்னத்தம்பி.
49 குலேந்திரன் அஜந்தன் – 3 வயது குழந்தை.
50 கிருஸ்ணபிள்ளை கனகசூரியம்.
51 கிருஸ்ணபிள்ளை மோகனராஜ்.
52 கிருஸ்ணபிள்ளை சுந்தரலிங்கம்.
53 கிருஸ்ணபிள்ளை சிதம்பரமூர்த்தி
54 கிருஸ்ணபிள்ளை விஜயகுமாரி.
55 கிருபானந்தம் அமிர்தலிங்கம்.
56 கறுப்பையா சிவசாமி- கமம் 40 வயது.
57 கறுவல்தம்பி திருச்செல்வம்.
58 கணபதி குகநாதன் – தொழிலாளி 21 வயது.
59 கணபதி சந்திரன்.
60 கணபதிப்பிள்ளை இராஜேஸ்வரி.
61 கணபதிப்பிள்ளை  புஸ்பலதா.
62 கணபதிப்பிள்ளை பரசுராமன்.
63 கணபதிப்பிள்ளை தவராசா.
64 கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை.
65 கணபதிப்பிள்ளை சிவபாலன்-  தொழிலாளி.
66 கணபதிப்பிள்ளை சிவலிங்கம் – சாரதி 49 வயது.
67 கணபதிப்பிள்ளை சண்முகநாதன்- தொழிலாளி 35 வயது.
68 கணபதிப்பிள்ளை சண்முகம்.
69 குணரெட்ணம் சிவகௌரி.
70 பாவில் சண்முகம்.
71 பாலன் மகேந்திரன்.
72 பாலன் கேதரன்.
73 பாலசுந்தரம்.
74 பாண்டியன் முனியாண்டி.
75 பத்மநாதன் விநாயமூர்த்தி.
76 பழனித்தம்பி மாணிக்கம் – 46 வயது.
77 பீ.ஜி.பியாந்தன்.
78 பீ.நந்தசிறி.
79 பி.மாரியான்.
80 பீ.சுசிபன்.
81 ரீ.மாதவன்.
82 ஐயாத்துரை மகேஸ்வரன்.
83 ஐயாத்துரை கோவிந்தன்.
84 கைலாயபிள்ளை தேவராசா மாணவி 8 வயது மாணவன்.
85 வை.இராசதுரை.
86 வை.பிரான்சிஸ்.
87 வைரமுத்து கற்பகம்.
88 வைரமுத்து கோபாலபிள்ளை.
89 வைரமுத்து தெய்வானை.
90 வைரமுத்து சிவம்.
91 தர்மலிங்கம் பொன்னுத்துரை.
92 தம்பிப்பிள்ளை இராசலிங்கம்.
93 தம்பிப்பிள்ளை கந்தையா.
94 தம்பிமுத்து கந்தையா- கமம் 77 வயது.
95 தம்பிமுத்து தயாபரன்.
96 தம்பிமுத்து சின்னத்துரை அறங்காவலர் 52 வயது
97 தம்பிமுத்து சிந்தாத்துரை- விவசாயம் 70வயது.
98 திருநாவுக்கரசு கணேசமூர்த்தி.
99 திருநாவுக்கரசு கருணாநிதி – விவசாயம் 18 வயது.
100 திருநாவுக்கரசு புஸ்பராசா.
101 தங்கநேசம் வேலுப்பிள்ளை.
102 தங்கராசா உதயசூரியன்.
103 தங்கராசா மனோகரன் 18 வயது.
104 தங்கராசா ராகினி.
105 மார்க்கண்டு தங்கவேல்.
106 மார்க்கண்டு யோகராசா.
107 மார்க்கண்டு சிவானந்தன் 29 வயது.
108 மாசிலாமணி தருமலிங்கம்.
109 மாசிலாமணி செல்வரட்ணம்.
110 மாசிலாமணி விநாயகமூர்த்தி விவசாயம் 26 வயது.
111 மாணிக்கம் பாலு.
112 மாணிக்கம் முருகேசப்பிள்ளை- கமம் 21
113 மாணிக்கம் ஜெகநாதன்.
114 முத்துலிங்கம் பாலபாஸ்கரன்.
115 முத்துலிங்கம் பரமேஸ்வரி ஆசிரியர் 32 வயது.
116 முத்துலிங்கம் செல்லையா.
117 முருகுப்பிள்ளை தங்கரெத்தினம்.
118 முருகுப்பிள்ளை தங்கராசா.
119 முருகுப்பிள்ளை ஞானம்மா.
120 மருதுரிஸ் செல்வராசா.
121 முருகேசு உதயகுமார்.
122 முருகேசு பாஸ்கரன்.
123 முருகேசப்பிள்ளை பத்மநாதன்.
124 மணியம் சோமசுந்தரம்.
125 ஆ.யோகநாதன்.
126 ஆர்.மயில்வாகனம் – 50 வயது.
127 அம்பாரக்குட்டி தியாகராஜா.
128 அழகையா இராமச்சந்திரன்.
129 அழகையா சாமித்தம்பி .
130 அழகையா சிவா.
131 அழகையா வரீசேனன்.
132 அழகையா ரகுநாதன் .
133 அரசரெத்தினம் கதிரமலை .
134 அரசரெட்ணம் மகேந்திரன் .
135 அரசரட்ணம் வள்ளியம்மை 58 வயது.
136 அருளப்பா இந்துருஜன்.
137 அருணாசலம் இராசரெட்ணம்.
138 அருணாசலம் சின்னப்பிள்ளை. 55 வயது
139 ஆறுமுகம் கந்தசாமி.
140 ஆறுமுகம் கலா.
141 ஆறுமுகம் தெய்வேந்திரம் – தச்சுத்தொழில் 34 வயது.
142 யோகராசா கிருபானந்தி.
143 கே.அழகையா.
144 கே.சிவலிங்கம் 48 வயது.
145 கே.ரவிச்சந்திரன்.
146 பொன்னம்பலம் இராஜேந்திரன்.
147 பொன்னம்பலம் இராசமணி.
148 பொன்னுச்சாமி கந்தசாமி – தொழிலாளி 24 வயது.
149 பொன்னுச்சாமி கணேசமூர்த்தி – ஆசிரியர் 26 வயது.
150 பொன்னையா உதயகுமார்.
151 பொன்னையா மகேஸ்வரன்.
152 பொன்னையா வள்ளியம்மை 67 வயது.
153 தேவநாயகம் மகேந்திரன்.
154 சொலமன் சகாயநாதன் .
155 செல்லையா கிருஸ்ணபிள்ளை.
156 செல்லையா அசோகன் – மின்சாரசபை ஊழியர் 24 வயது
157 செல்லையா சோமசுந்தரம்.
158 செல்லையா வடிவேல.
159 செல்வன் சிவநாதன்.
160 செல்லன் அருளம்மா.
161 செல்லத்துரை தர்மலிங்கம்.
162 செல்லத்தம்பி கருணாநிதி – கடதாசி ஆலை ஊழியர் 24 வயது.
163 வெள்ளையன் – மாணவன் 7 வயது.
164 வேல்முருகு முத்து.
165 வேலுப்பிள்ளை நாகேந்திரன்.
166 வேலுப்பிள்ளை காசியானந்தன்.
167 வேலுப்பிள்ளை கதிரமலை.
168 வேலுப்பிள்ளை திருச்செல்வம் தொழிலாளி 22 வயது.
169 வேலுப்பிள்ளை யோகராசா.
170 வேலுப்பிள்ளை தெய்வநாயகம் .
171 வேலுப்பிள்ளை சந்திரகுமார்.
172 வேலுப்பிள்ளை சுதாகரன்.
173 ரெட்ணம் செல்வராசா – கமம் 20 வயது.
174 சு.மனோகரன்.
175 சந்திரன் அருளப்பன்.
176 சுப்பிரமணியம் நடேஸ்வரன்.
177 சாமித்தம்பி கணபதிப்பிள்ளை.
178 சாமித்தம்பி குணசீலன்.
179 சாமித்தம்பி தங்கவேல் – மாணவன் 17 வயது.
180 சாமித்தம்பி சுப்பிரமணியம்.
181 சதாசிவம் புவனேந்திரன்.
182 சதாசிவம் தேவராசா – விவசாயம் 18 வயது.
183 சின்னத்துரை காளிக்குட்டி.
184 சின்னத்தம்பி குகதாஸ்.
185 சின்னத்தம்பி திலகேஸ்வரி.
186 சின்னத்தம்பி அண்ணாதாசன்.
187 சின்னத்தம்பி வன்னியசிங்கம்.
188 சின்னதம்பி ரவிச்சந்திரன் – சாரதி 22 வயது.
189 சின்னையா முத்தையா.
190 சீனித்தம்பி இந்திரன்.
191 சீனித்தம்பி தவசீலன்.
192 சீனித்தம்பி ஜெயசீலன்.
193 சீனித்தம்பி மாரிமுத்து.
194 சீனித்தம்பி வேல்முருகு.
195 சித்தாத்துரை காளிக்குட்டி – கமம் 47 வயது.
196 சித்தாத்துரை செல்வராசா.
197 சித்தாத்துரை சம்பந்தன் – விவசாயம் 24 வயது.
198 சித்தாத்துரை தவராசா.
199 சித்தாத்துரை தேவராசா.
200 சித்தாத்துரை வேவி.
201 சித்தாத்துரை சம்மந்தன்.
202 சித்திரவேல் பத்மநாதன்.
203 சிவனடியார் ரவிச்சந்திரன்.
204 சிவானந்தன் இந்திரன்.
205 சிவானந்தன் பாலச்சந்திரன்.
206 சிவானந்தன் ரவிச்சந்திரன்.
207 சிவஞானம் கணேசன் – விவசாயம் 24 வயது
208 சிவசம்பு தேவராசா.
209 சங்கரப்பிள்ளை அற்புதராசா.
210 சங்கரப்பிள்ளை வில்வராசா – விவசாயம் 20 வயது.
211 சாலமன் மோகனராஜன் சகாயநாதன் – வியாபாரம் 22 வயது.
212 சண்முகம் இளஞ்சேகர் – மாணவன் 10, வயது.
213 விநாயகமூர்த்தி பாலு.
214வீரக்குட்டி கிட்ணன்.
215 வீரபாண்டியன் ஜமுனா.
216 வள்ளியம்மை.
217 ராமன்.
218 ரவி தில்லையம்மா.
219 ஏ.ஈ.தேவதாசன்.
220 ஏ.கனகரெத்தினம்.
221 ஏ.பரமநாதன்.
222 ஏ.முருகேசபிள்ளை.
223 ஏ.சுபாசினி – மாணவி 17 வயது.
224 ஏ.சின்னப்பிள்ளை 50 வயது.
225 ஏ.சித்திரவேல்.
226 ஏ.சிவநேசன்.
227 ஏ.ஏ.சண்முகவேல்.
228 எஸ்.மாணிக்கம் 35 வயது.
229 என்.இராசன்.
230 என்.சந்திரகுமார்.
231 ஏகாம்பரம் தருமலிங்கம்.
232 எம்.முத்துக்குமார்.
233 எம்.அருள்மணி .
இந்த பட்டியலில் உள்ளவர்களை விட இன்னும் பலர் கொல்லப்பட்டபோதும் அவர்களுடைய பெயர் விபரங்கள் பெறமுடியவில்லை.
படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்களை கவனித்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பமாக வும், மாணவர்கள், ஆசிரியர்கள்,அரச தொழிலாளர்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், குழந்தைகள், சிறுவர்
கள். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், கற்பிணித்
தாய்மார்கள் என பலரும் அடங்கலாக இதில் படுகொலை செய்யப்பட்டனர்.
2026, ஆகஸ்ட், 12, ல் 36, ஆண்டுகள் கடந்தும் இது வரை நீதி இல்லாத தமிழினப்படுகொலைகளில் இதுவும் ஒன்றாகும்.