ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வர்த்தக வசதியைப் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்த உபக்குழுவுக்கு இணைத்தலைமைத்துவம் வகிக்கிறது.
இவ்வர்த்தக வசதியைப் பெறுவதற்கு இலங்கையானது மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றுச்சூழல், காலநிலை பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய நான்கு பிரதான பிரிவுகளில் அமைந்த 27 சர்வதேச மாநாடுகளுக்கு இணங்கச் செயல்பட வேண்டியிருந்ததுடன், அடுத்த சுற்றுக்காக மேலும் ஐந்து கூடுதல் மாநாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் மீதான ஐக்கிய நாடுகளின் ஒற்றை மாநாடு, உளவியல் ரீதியான பொருட்கள் மீதான மாநாடு, போதைப்பொருள் மற்றும் மனோசியோச்சையான பொருட்களின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான மாநாடு, ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு மற்றும் சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஆகியவற்றுக்கு இணங்குவது இதில் அடங்கும்.
ஜி.எஸ்.பி. பிளஸ் விண்ணப்பம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை கடந்த வாரம் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்ததுடன், இந்த வசதியைத் தொடர்ந்து பெறுவதற்கு கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் இணங்குவது குறித்து ஆராய்வதற்காக இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மேலும் எட்டு அமைச்சச்சுகள் இணைந்துகொள்ளவுள்ளன.
தற்போதைய வரிச்சலுவைப் பெறல் 2026 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடடைவதால், இலங்கை இம்முறை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.ஜி.எஸ்.பி. பிளஸ் சலுவை வசதியானது தகுதியுள்ள வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் பிரவேசிப்பதற்கான சலுகைகளை வழங்கிவருவதுடன், இந்த வசதியைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வது சர்வதேச மாநாடுகளை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.



