முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சி.குகநேசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வானது, படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான சி.குகநேசன், இ.கிரிதரன், அ.சற்குணதாஸ், த.தர்மலவன், ஜீ.ராதிகா, சு.வளர்மதி, மு.கஜேந்தினி, முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ச.ஜீவராசா, சமூகசெயற்பாட்டாளர் த.யோகேஷ்வரன், பொதுகமக்கள் எனம் பலரும் பங்கேற்றிருந்தனர்.



