வட மாகாண உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை – ஆளுநர்!

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம் தனது யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், கண்டி வீதியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில், வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன்  நடைபெற்றது.

இதன் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் புதிய அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.