அம்பாறை திராய்க்கேணி படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்!

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க் கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (06) அக்கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அந்த கிராம மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, இம்முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை மேற்கொண்டு கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.