இலங்கையில் சிங்கள-பௌத்த பயங்கரவாதம்  : A.M.L லம்பேட்

சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்வது அவசியம். பௌத்தம் கருணை, அஹிம்சை மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மரியாதை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. ஆனால் சிங்கள-பௌத்த தேசியவாதம் (Sinhala-Buddhist Terrorism)என்பது இலங் கையை முதன்மையாக சிங்கள-பௌத்தர்களுக்கே உரிய நாடாக கருதும் பயங்கரவாத கட்டமைப்பைக் குறிக்கிறது.
“சிங்கள-பௌத்த பயங்கரவாதம்” (Sinhala-Buddhist Terrorism)என்னும் கட்டமைப்பை ஆய்வு செய்ய, அதனை “இன-மத பெரும்பான்மைவாத அரசு பயங்கர வாதம்” (Ethno-Religious Majoritarian State Terrorism) என்ற கோணத்தில் அணுக வேண்டும். இது ஒரு சாதாரண அரசுசாரா தீவிரவாதக் குழுவாகச் செயல்படாமல், பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய கலப்புச் சித்தாந்தமாக (Hybrid Ideology) இயங்குகிறது:
1) இன-அரசியல் தேசியவாதம்(Ethno-Political Nationalism): இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்த மானது; தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரும் இரண்டாம் தரக் குடிமக்கள் அல்லது சுதேசிகளற்றவர்கள் என்ற அரசியல் கோட்பாடு.
2) மத மேலாதிக்கவாதம் Religious Supremacism): மகாவம் சத்தின் தம்மதீப (தர்மத்தின் தீவு) கதையாடலால் தூண் டப்பட்டு, நிலப்பரப்பைப் புனிதப்படுத்தி, அரசியல் ஆதிக் கத்தையும் அரசு வன்முறையையும் நியாயப்படுத்தப் பௌத்த மதத்தை ஆயுதமாக்குதல்.
இந்த பயங்கரவாத அமைப்பு, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள நிறுவன வலையமைப்புகள் மூலம் இயங்குகிறது. முதலாவதாக பௌத்த அடிப்படைவாத துறவிகள் (The Clerical-Political Nexus) (மகாசங்கத்தினர்) அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்திக ளாக நின்று இந்த பயங்கரவாத கட்டமைப்பின் வேர்களாக காணப்படுகினறனர்.
இரண்டாவதாக அரசு நிர்வாகமும் சட்ட அமுலாக்க மும் (State Bureaucracy & Law Enforcement) அரசி யல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறை மற்றும் நீதித்துறை நிறுவனங்கள் இதற்கான நிர்வாக, சட்ட மற்றும் செயல்பாட்டுப் பாதுகாப்பை வழங்குகின்றன.
அடுத்ததாக இராணுவப் படைகள் (Military Forces) சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து ஆக்கிரமிப்பையும் மக்கள் தொகை கட்டுப்பாட்டையும் முன்னெடுத்து கொண்டுள்ளதுடன் இனஇழிப்பு. இனச் சுத்திகரிப்பு மற்றும் போர்குற்றம் போன்றவற்றின் களசெயற் பாட்டாளர்களாக உள்ளனர்.
பொருளாதார நன்மைகளும் பொதுமக்களும்(Economic Interests & Majoritarian Civil Society ) உள்ளுர் வர்தகர்களும் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப் புகளும் அரசு ஆதரவு பெற்று மறைமுக மற்றும் வெளிப்படையான ஆதரவு. பொருளாதார, நிதியுதவியும் சிங்கள பௌத்த மத்தியவர வர்க்கத்தினரை ஒன்று சேர்ப்பதற்கு அடிப்படையாக உள்ளனர்..
இந்தச் “சிங்கள-பௌத்த பயங்கரவாதம்”  அரசுச் சட்டங்கள் மற்றும் நீதித்துறை நிறுவனங்கள்(Constitution, and State Power) மூலமாகவே நேரடியாக இயங்குகிறது. சிங்கள அரசாங்கத்தின் இரண்டாம் குடியரசு அரசியலமைப் பின் (பிரிவு 9) உள்ளடக்கமாக பௌத்தத்திற்கு முதன்மை அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு- 12) என்ற அடிப்படை உரிமையை  மீறுகிறது.
மனித குலத்திற்கு ஒவ்வாத(Draconian Legislation)கொடிய சட்டங்கள் (பயங்கரவாதத் தடைச் சட்டம் – PTA) 1979 இல் கொண்டுவரப்பட்ட இச்சட்டம், தமிழ் மக்களுக்கு எதிராகத் தன்னிச்சையான கைதுகள், நீண்டகாலச் சிறைவாசம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்குதல்களை மேற்கொள்ளத் தொடர்ச்சியாகப்  சிங்கள பௌத்த பயங்கரவாதத்தினால் வெளிப்படையாகவே பயன்படுத்தப்படுகிறது.
நீதிமன்றப் பாதுகாப்பும் (Judicial Impunity) நீதிமன்ற கட்டமைப்பும்  சிங்கள பௌத்த பயங்கரவாதத்தின் கருவி களாக அரசு வன்முறைகள், போர்க் குற்றங்கள் மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் முறையான அரசுப் பாதுகாப்பையும் முழுமையான விலக்களிப்பையும் பெறும் விதமாக கட்டமைக்கபட்டுள்ளது.
சிங்கள பௌத்த பயங்கரவாதத்தின் செயற்பாட்டு உத்தியாக வன்முறையின் வடிவங்கள் (Manifestations of Violence) போர்க் குற்றங்கள் (War Crimes) முதல் கட்ட மைக்கப்பட்ட இனப்படுகொலை வரை (Structural Genocide) மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு அங்கமாகவே போர்க் குற்றங்கள் மற்றும் கொடூரங்கள்(War Crimes & Mass Atrocities) 2009 போரின் இறுதிப் பகுதியில் “பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள்” மீதான குண்டுவீச்சு, பட்டினி போடுதல், பாலின வன்முறைகள் மற்றும் படுகொலைகள் போன்ற தீவிர போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. மேலும் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வலிந்து காணாமல் (Enforced Disappearances & Genocide) ஆக்கப்பட்டுள்ளனர்; மேலும் உடல் ரீதியான மற்றும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் (physical and structural genocide) இவற்றின் தொடர்ச்சியாக தொடர்கின்றன.
மேலுமாக சிங்கள பௌத்த பயங்கரவாதத்தினால் அரசு ஆதரவு பெற்ற குடியேற்றமும் சிங்களமயமாக்கல் (State-Sponsored Colonization & Sinhalization ) தமிழர்களின் பாரம்பரிய தாயக நிலங்களை ஆக்கிரமித்தல், எல்லை களை மாற்றுதல் மற்றும் தமிழ்ப் பகுதிகளில் பௌத்த சின்னங்களைச் சட்டவிரோதமாக நிறுவி மக்கள்தொகை கட்டமைப்பை மாற்றுதல் போன்றவை அரச-சட்டகட்ட மைப்புக்களின் அடிப்படை செயற்பாடாக உள்ளது. இவர்கள், தமிழ் மக்களின் மனித உரிமைகள், சுயநிர்ணய உரிமை மற்றும் சட்ட அடிப்படை உரிமைகள் ஆகியவை திட்டமிட்டு மறுக்கப்படுகின்றமையை நோக்கமாக கொண்டு செயற் படுகின்றனர்.
இறுதியாக சிங்கள-பௌத்த பயங்கரவாதம் என்பது ஒரு சாதாரண தீவிரவாத இயக்கம் அல்ல, அது இலங்கை அரசின் கட்டமைப்பிற்குள் ஆழமாகப் பொதிக்கப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகும். அதற்கெதிரான ஈழத்தமிழர்களின் மூலோபாய கொள்கைகள்  பரந்துபட்ட வகையில் திட்டமிடப்பட்ட இலக்கினை நோக்கி நகர்த்தும் உத்தியும் மீள்கட்டமைப்பு செய்யப்பட வேண்டி உள்ளது.