வடக்கு கிழக்கு யுத்தத்தின் போது அரசின் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளை மீட்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு திங்கட்கிழமை (03) மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
கேப்பாப்புலவு மற்றும் பலாலியில் காணிகளை இழந்த மக்களின் நில உரிமை தொடர்பாக உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புகள் மற்றும் சம உரிமை இயக்கம் என்பன பங்கெடுத்ததுடன் அது தொடர்பான கலந்துரையாடலொன்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.



