மிகப்பெரும் போருக்குத் தயாராகும் இரு பெரும் கூட்டணிகள்: வேல்ஸில் இருந்து அருஸ்

வளைகுடாவில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த போர் மெல் மெல்ல ஒவ்வொரு நாடுகளாக உள்வாங்கி விரிவடைந்து வருகின்றது. இந்த வாரம் அமெரிக்க மற்றும் சவுதி அரேபிய கூட்டணிப் படையினர் ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு படைப் பிரிவான 240,000-க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொண்ட PMF மீது வான் வழித் தாக்குதல்களை மேற்கொடுள்ளன.
ஹூதிகள் மட்டுமே ஈரானின் ஒரே பிராந்திய கூட்டாளிகள் அல்ல என்பதால் PMF-ம், ஜூலை மாத இறுதியில் சவுதி நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியது. இந்த PMF குழு, பெரும்பாலும் IRGC-யால் வழிநடத்தப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ஈராக்கில் அமெரிக்காவின் கே.சி-135 எரிபொருள் நிரப்பு விமானத்தின் மீதூன ஏவுகணைத் தாக்குதல்கள் உட்பட 600 இற்கு மேற்பட்ட ஏவுகணை அற்றும் ஆழில்லாத தாக்குதல் விமானங்களின் தாக்குதல்களுக்கு இந்த குழுவே பொறுப்பு என அமெரிக்கா கூறிவருகின்றது.
எனவே தான் PMF தளங்கள் மீது அமெரிக்க-சவுதி கூட்டு குண்டுவீச்சை நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். PMF பழிவாங்குவதாக சபதம் செய்துள்ளது, மேலும் தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவியது.
தற்போதைய புவிசார் அரசியல் நிலப்பரப்பு இப்போது உறுதியாக நிலைபெற்றுள்ளது: IRGC-யால் ஒருங்கி ணைக்கப்பட்ட ஈரானிய கூட்டாளிகள், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கடல், பாப் அல்-மண்டேப் நீரிணை ஆகிய வற்றை அன்சர் அல்லா அமைப்பு மூடியுள்ளது. சவூதி கப்பல் போக்குவரத்திற்கு ஒரு கடற்படை முற்றுகையை விதித்து மூடியுள்ளது. அதை உடைத்துக்கொண்டு செல்ல முயன்ற மூன்று கப்பல்களை அவை வெற்றிகரமாகத் தாக்கின.
ஜூலை மாத நடுப்பகுதியில் சனா விமான நிலையம் மீது சவூதி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஏமன் தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள அப்ஹா விமான நிலையம் மீது நேரடித் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்தது.
அது சவுதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல் களான என்செலியா மற்றும் லைலா, மற்றும் இரசாயன எண்ணெய்க் கப்பலான என்சிசி கசல். கப்பல்களை தாக்கிதுடன், 1,200 கி.மீ நீளமாக சவுதி அரேபியாவின் எரிபொருள் விநியோகக் குழாய்க்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றது. நாள் ஒன்றிற்கு 5 மில்லியன் பரல்கள் எண்ணையை விநியோகம் செய்யும் இந்த குழாய் ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்ட பின்னர் செங்கடல் மற்றும் சுயஸ் கால்வாய் ஊடான பிரதான வழங்கல் பாதையாக இருந்தது.
ஏமன் படைகள், ஜிசான் துறைமுகத்தில் உள்ள அராம்கோ சுத்திகரிப்பு நிலையங்களையும், செங்கடல் கடற்கரையில் உள்ள யான்புவில் உள்ள சுத்திகரிப்பு வசதிகளையும் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவின. மேலும், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் கிழக்கு-மேற்கு குழாய்வழியைத் தாக்கின. இதனால், சவூதி பிரதேசம் வழியாக யான்புவிற்குச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்து உள்கட்டமைப்பு சேதமடைந்தது.
ஏமன் மீது சவுதி அரேபியா வான் தாக்குதல்களை நடத்தியத்திற்கு பதிலடியாக சவுதி அரேபியாவின் மிகப் பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான அரம்கோ நிறுவனத்தின் மீது குதீஸ் அமைப்பினர் தாக்குதல்களை நடத்தயதால் அந்த நிறுவனத்தின் ஒரு பகுதி மூடப் பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு 400,000 பரல்களை உற்பத்தி செய்யும் அந்த நிலையத்தின் இழப்பு பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பாகவே சவுதி கருதுகின்றது. செங்கடல் வழி யாகச் செல்லும் சவூதி எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் முயல்வதால், இந்த முழு யேமன் நடவடிக்கையும் தெஹ்ரானின் செல்வாக்கின் கீழ் செயல் படுகிறது.
எனவே தான்  ஏமன் படைகளுக்கு எதிராக சவூதி அரேபியா சர்வதேச தரை மற்றும் கடல் கூட்டணியை அமைக்கிறது. யேமன் படைகள் பின்வாங்க மறுப்பதால், பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை வலுக்கட்டாயமாக மீண்டும் திறப்பதற்கான ஒரு சர்வதேசக் கூட்டணியை சவூதி அரேபியா அடுத்த வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கடல், பாப் அல்-மண்டேப் நீரிணை மற்றும் ஏடன் வளைகுடா ஆகிய பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப் படுத்துவதற்கான சவுதி தலைமையிலான சர்வதேச கடல்சார் தற்காப்புக் கூட்டணியில், அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் பங்கேற்றுள்ளன.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், உண்மை யில் அங்கு எந்தவொரு ‘தற்காப்புக்’ கூட்டணியும் இல்லை என்பதுதான். கப்பல்களை அனுப்பும் எவருக்கும், ஏவுகணை வலிமை மிக்க ஒரு நாட்டிற்கு எதிரான பெரும் மோதலில் தாங்கள் பங்கேற்கிறோம் என்பது ஏற்கனவே தெரிந்திருக்கும் ஒரு விஷயமே. இந்த நடவடிக்கைக்கு தவிர்க்க முடியாமல் இராணுவ பலம் தேவைப்படும்.
ஜலசந்தியின் ஆப்பிரிக்கப் பக்கத்தை உருவாக்கும் செங்கடல் கடற்கரை நாடுகளான எகிப்து, சூடான், ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகியவை ஏற்கனவே பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளன. சவூதியர்கள் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நாடுகள் அனைத்தும் ஏற்கனவே இப்பகுதியில் போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளன மற்றும் வாஷிங்டனின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தைத் தவிர, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், கூட்டணியில் சேர வாய்ப்புள்ள நாடுகளின் மொத்தப் பட்டியல் சுமார் 50 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், சவூதியின் இந்த உத்தி கடலைத் தாண்டியும் நீள்கிறது. சம்பளம், ஆள்சேர்ப்பு, ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கணிசமாக அதிகரிப்பதன் மூலம், யேமனுக்குள் உள்ள தனது பதிலிப் படைகளைத் ரியாத் திரட்டியுள்ளது. இந்தத் தரைப்படையானது, 20,000 முதல் 30,000 வீரர்களைக் கொண்ட திர் அல்-வத்தான் பகுதியையும், ஹத்ரமாத் பழங்குடிக் கூட்டணியைச் சேர்ந்த 15,000 போராளிகளையும், தற்போது ரியாத்துக்குத் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்ட, ஐக்கிய அரபு அமீரகத்தால் நிதியளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முன்னாள் போராளிகளையும் சார்ந்துள்ளது.
செங்கடல் மற்றும் ஹார்மூஸ் நீரிணை ஆகியவை மூடப்பட்ட பின்னர் சுயஸ் கால்வாயைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செய்யலாம் என நினைத்த வேளையில் எகிப்த்தின் துறைமுகத்தில் நின்ற அமெரிக்காவின் எரிவாயு கப்பல் உட்பட இரண்டு கப்பல்கள் மீதான தாக்குதல் அந்த வழியையும் மூடியுள்ளது. அதாவது இந்த 3 வழிகளும் மூடப்பட்டால் 35 தொடக்கம் 40 விகிதமான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் என்பதுடன், உலகின் பொரு ளாதாரம் முற்றாக முடக்கப்படலாம் என்பதால் ஒன்றில் மிகப் பெரும் போர் இல்லையேல் சமாதானம் என்ற நிலைக்கு வந்துள்ள வளைகுடா போர்.