செம்மணி புதைகுழி: சிங்கள அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், நீதி மறுப்பு, தமிழர்களின் சர்வதேச இராஜதந்திரத் தோல்வி! : A.M.L லம்பேட்

செம்மணி சிந்துபாத் பகுதியில் மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இன்றளவு வரை யில் 454 வரையிலான மனித எச்சங்கள (Human Skeletal) முழுமையாக மற்றும் பகுதியளவில் அகழ்ந் தெடுக் கப்பட்டுள்ளது. இந்ந புதைகுழிகள் பாரியளவிலான பிரதே சத்தினை உள்ளடக்ககூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.
இது தொடர்பில் சிங்கள அரசாங்கமானது வழ மையைப்போன்றே  உள்ளககட்டமைப்புக்களினூடாகவே Domestic Processes) உண்மையினை கண்டறியும் செயற் பாடானது இடம் பெறும் என நீதியமைச்சர் தெரிவித்து இருப்பதுடன் சர்வதேச ரீதியான கண்காணிப்பக்களினை யும் (Independent international assistance) மறுத்துள்ளார். இது கடந்த காலங்களினைப்போலவே யுத்த குற்றவாளிகளினை (War Criminals) பாதுகாத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிமறுப்பு போன்றவற்றினை தொடர்ந்து தமது நிலைப் பாடாக கொண்டிருக்கின்றது.
சிங்கள அரசாங்கத்தினுடைய பொறுப்புக்கூறல் கட்டமைப்பின் மறுப்பானது (Post-conflict accountability framework – போருக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் கட்டமைப்பு) தீர்க்கப்படாத முக்கியமான மனித உரிமை மற்றும் நீதிசார் சவால்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது ஒரு குறிப்பிட்ட புதைகுழி தொடர்பான விசாரணை மட்டுமல்ல மாறாக, சிங்கள் தேரவாத கட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இனசுத்திகரிப்பின் (Genocide) ஒர் அங்கமாகும். கடந்தகால மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதற்கான இடைக்கால நீதிக்கான கட்டமைப்பு (Transitional justice architecture – இடைக்கால நீதிக்கான கட்டமைப்பு), உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் நிறுவன சீர்திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள், அரச நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் நீதிக்கான சர்வதேச தரநிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறுபான்மை சமூகமொன்றின் பரந்த அரசியல் மற்றும் சட்டப் ரீதியான பிரச்சினையாகும்.
தமிழீழ பகுதி முழுவதும் காணப்படுகின்ற செம்மணி போன்ற மனித புதைகுழிகள், வரலாற்று நினைவுகளின் அடையாளங்களாக மட்டுமல்லாமல், உரிமைக்காக போராடிய சுதேச இனமொன்றின், சிறு பான்மை இனக்குழுத்தின் மீதான இனச்சுத்திகரிப்பின்  ஆதாரங் களாகவும் விளங்குகின்றன. பாதிக்கப்பட்ட சமூகத்தின் உண்மை அறியும் உரிமை (Right to Truth), காணாமல் போனோரின் நிலையை அறியும் உரிமை மற்றும் நீதியை நாடும் உரிமை ஆகியவை நவீன மனித உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
சர்வதேச நாடுகளில் பல்வேறு மோதல்களுக்குப் பின்னர் கண்டறியப்பட்ட புதைகுழிகள் சர்வதேச நீதிக் கான (International Justice) முக்கிய ஆதாரங்களாக மாறியுள் ளன. ஹோலோகாஸ்டholocaust) ஆர்மேனிய (Armenian Genocide) மக்களின் இனப்படுகொலை, முன்னாள் யுகோஸ்லாவிய மோதல்கள், ருவாண்டா(Rwandan genocide) மற்றும் கொசோவோ (kosovo genocide) போன்ற நிகழ்வுகள், கடந்தகால அநீதிகளை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் எவ்வாறு சட்ட மற்றும் நிறுவன பொறிமுறைகளை உருவாக்கியது என்பதை காட்டுகின்றன.
இந்த அனுபவங்கள் ஒரு முக்கியமான பாடத்தை வழங்குகின்றன: புதைகுழிகள் என்பது வெறும் தொல்லியல் ஆதாரங்கள் அல்ல் அவை மனித உரிமை மீறல்களின் சாட்சியங்களாகவும், சர்வதேச சமூகத்தின் நீதிக்கான பொறுப்பை நினைவூட்டும் ஆதாரங்களாகவும் உள்ளன.
இந்த பின்னணியில், செம்மணி விவகாரமும் நீதியை சர்வதேசமயமாக்கல் (Internationalisation of justice – நீதியை சர்வதேசமயமாக்கல்) என்ற பரந்த விவாதத்துடன் தொடர்புபடுகிறது. சர்வதேச சட்டப் பொறுப்புகள் (International legal obligations – சர்வதேச சட்டப் பொறுப்புகள்) அடிப்படையில், அரசுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகளை விசாரிக்கவும், ஆதாரங்களைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வுகளை வழங்க வும் கடமைப்பட்டுள்ளன. இங்கு மனித உரிமைகளின் நெறிமுறைச் சட்டக் கட்டமைப்பு (Normative framework of human rights – மனித உரிமைகளின் நெறிமுறைச் சட்டக் கட்டமைப்பு) முக்கிய பங்கு வகிக்கிறது.
இது: மனித உயிரின் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி rule of law), நீதிக்கான சமமான அணுகல், பாதிக்கப் பட்டவர்களின் கண்ணியம், மீண்டும் மீறல்கள் நடை பெறாத உத்தரவாதம் ஆகிய கொள்கைகளை அடிப்ப டையாகக் கொண்டுள்ளது.
மேலும், நவீன இடைக்கால நீதியில் பாதிக்கப் பட்டவர்களை மையப்படுத்திய நீதி அணுகுமுறை (Victim-centred justice – பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய நீதி அணுகுமுறை) முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, அரசியல் சமரசங்களை விட பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை, நீதி மற்றும் கண்ணியம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
செம்மணி விவகாரம் இலங்கையில் காணப்படும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறையை (Accountability deficit – பொறுப்புக்கூறல் பற்றாக்குறை) வெளிப்படுத்தும் முக்கிய மான உதாரணமாக பார்க்கப்படுகிறது.
சிங்கள அரசாங்கமானது முள்ளிவாய்க்கால் இறுதி இனவழிப்பின்போது யுத்தகுற்றங்களில் ஈடுபட்ட படைத்தரப்புக்களினை உள்நாட்டு பொறிமுறை மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாத்து வருகின்றது. மேலும் செம்மணி விவகாரத்துடன் தொடர்புபட்ட நபர்கள், இராணுவத்தின் பல்வேறுபட்ட உயர்நிலைபதவிகளினை கொண்டிருப்பதுடன் அவர்களுக்கு நீதித்துறையின் சட்டரீ தியான பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் பொறிமுறைகள் பல ஆண்டுக ளாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயல்முறை களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தியுள்ளன. இருப்பினும், உள்நாட்டு பொறிமுறைகளின் நம்பகத்தன்மை, சுயாதீனம் மற்றும் செயல்திறன் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், இலங்கையின் அரச மற்றும் சட்டத்துறைகட்டமைப்புக்களின் நிறுவன ரீதியான பொறுப் பின்மை (Institutional impunity) என்பது போருக்குப் பிந் தைய சமூகங்களில் நீதியை பாதிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். நீதியின் நம்பகத்தன்மை என்பது குற்றச்சாட்டு களை மறுப்பதில் மட்டும் இல்லை; மாறாக, வெளிப்படையான விசாரணைகள், ஆதாரபூர்வமான அணுகுமுறை மற்றும் சட்டத்தின் சமமான நடைமுறை ஆகியவற்றில் உள்ளது.
செம்மணி விவகாரத்தினை தமிழர் தரப்பானது ஒருமித்து கையாள்வதிலும்;,; இராஜதந்;திரரீதியாக சர்வ தேச சமூகத்துடன் கையாள்வதில் தோல்வியினை கொண்டுள்ளதுடன் சிங்கள தரப்பானது தந்திரோபாயமாக வெற்றிகரமாக தமது சார்பாக கையாள்கின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்தேசிய முன்னணியின் முயற்சி வெளியுலகிற்கு அடையாளப்படுத்தினர். இருப்பினும், சர்வதேச அரசியலில் தாக்கத்தை உருவாக்குவதற்கு தொடர்ச்சியான மற்றும் நிறுவனமயமான இராஜதந்திர அணுகுமுறை தேவைப்படுகிறது.
நவீன சர்வதேச உறவுகளில் அரசியல் அறிக் கைகள் மட்டுமே போதுமானவை அல்ல. அதற்கு பதிலாக கொள்கை ஆய்வு நிறுவனங்கள்,சட்ட நிபுணர் வலையமைப்புகள்,கல்வியியல் ஆய்வுகள்,ஊடக மூலோபா யம் போன்றவை அவசியமாகின்றன.
இதுவே கொள்கை அடிப்படையிலான சர்வதேச ஈடுபாடு (Policy-oriented international engagement) ஆகும். இன்றைய உலக அரசியலில் புலம்பெயர் இராஜதந்திரம் (Diaspora diplomacy) ஒரு முக்கியமான சர்வதேச கருவியாக மாறியுள்ளது. புலம்பெயர் தமிழர் சமூகமானது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு, மனித உரிமை அமைப்புகளுடன் இணைப்பு, சட்ட ஆவணப் படுத்தல்,சர்வதேச ஊடக ஈடுபாடுமூலம் நீண்ட கால தாக்கத்தை உருவாக்க முடியும். இதற்கு ஆதார அடிப்படையிலான வாத முன்வைப்பு (Evidence-based advocacy – ஆதார அடிப்படையிலான வாத முன்வைப்பு) மற்றும் மூலோபாய ஆதரவு மற்றும் சர்வதேச மூலோபாய ரீதியான வகிபங்கு (Strategic advocacy) முக்கியமானவை. முக்கியமாக உணர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையை விட, சர்வதேச சட்டம், ஆய்வு, ஆதாரம் மற்றும் கொள்கை அடிப்படையிலான அணுகுமுறை அதிகமான சர்வதேச ரீதியில் நம்பகத்தன்மையை உருவாக்கும்.தமிழர் அரசியல் அமைப்புகள், குடியியல் சமூகங்கள், பாதிக்கப்பட்டோர் குழுக்கள் மற்றும் புலம்பெயர் நிறுவனங்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த சர்வதேச மூலோபாயத்தை உருவாக்க வேண்டும்.
இதில் பல்தரப்பு இராஜதந்திர ஈடுபாடு (Multilateral diplomatic engagement) பொது இராஜதந்திரம் (Public diplomacy) மூலோபாய தகவல் தொடர்பு (Strategic communication) சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் (International accountability mechanisms)ஆகியவை முக்கிய இடம் பெற வேண்டும். மேலும், சர்வதேச மனித உரிமை விவாதங்களில் புதிய நெறிமுறைகளை உருவாக்கும் வகையில் நெறி முறை உருவாக்கும் முன்னோடி வகிபங்கு (Norm entrepreneurship –வகிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.