கோட்டாபயவின் தொலைபேசி உரையாடல் கசிவு விவகாரம் : குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தும் வகையில் உரையாடலை பதிவு செய்து வெளியிட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட என்பவருக்கு எதிராக இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல ஆகியோர் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பிலும் அதற்குப் பின்னால் உள்ள வெளிநாட்டுச் சக்திகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.