7 மாதங்களாக ஆசிரியர் இல்லை : பெற்றோர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்கள் இன்று (27) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

தரம் 3 வகுப்பில் பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர் இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலையின் ஆசிரியர் இல்லா பிரச்சினை தொடர்பில் வலயக்கல்லி அலுவலகத்திற்கு முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லை

நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகளின்  விரைவான தீர்வினைப் பெற்று தரவேண்டும் என்பதுடன் இவ்வாறான நிலை தொடர்ந்தால் மாணவர்களின் ஆரம்ப கல்வி பின்நோக்கி செல்லும் எனவும் குறிப்பிட்டனர்.