மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளதுடன் வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்தார்.
காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை (23) மட்டக்களப்பு மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் முன்னெடுத்தனர்.
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு காணாமல் போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்ற நிலையில் வியாழக்கிழமை (23) மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.
இதேபோன்று வவுணதீவு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இன்றைய தினம் சாட்சியங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளதுடன் வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்தார்.



