அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்துவதற்குப் பதிலாக சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளை அடிப்படை உரிமைகளுக்குள் உள்ளடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் அதற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் அளித்த பதில் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.



