இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெறும் 33வது ஆசிய பிராந்திய கூட்டமைப்புப் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் எக்ஸ் தளத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில்,
பிராந்திய அளவிலான இந்த முக்கிய மாநாட்டின் போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.



