ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல் நடத்தி​யது. இதில் ஓர் இந்​திய மாலுமி உயி​ரிழந்​தார். 10 இந்​திய மாலுமிகள் படு​கா​யம் அடைந்​தனர். இதுதொடர்​பாக ஈரான் தூதரக அதி​காரி​களை நேரில் வரவழைத்து மத்​திய அரசு கண்டனம் தெரி​வித்​துள்​ளது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் திகதி அமெரிக்​கா, ஈரான் இடையே போர் மூண்​டது. பல்​வேறு நாடு​களின் சமரசத்​தால் கடந்த ஏப்​ரல் 8-ம் திகதி இரு நாடு​கள் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது.

கடந்த ஜூன் 17-ம் திகதி இரு தரப்​பும் அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டன. இதன்​பிறகு தங்​கள் எல்​லையை ஒட்​டிய ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி வழி​யாகவே எண்​ணெய் கப்பல்கள் கடந்து செல்ல வேண்​டும் என்று ஈரான் இராணுவம் கட்டுப்​பாடு விதித்​தது. இதை மீறி ஓமன் கடல் பகுதி வழி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த எண்​ணெய் கப்​பல்​கள் மீது ஈரான் இராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது.

இதன்​ காரண​மாக அமைதி ஒப்​பந்​தம் இரத்து செய்​யப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் திகதி  அறி​வித்​தார். தற்​போது அமெரிக்​கா, ஈரான் இடையே தீவிர போர் நடை​பெற்று வரு​கிறது.

இந்த சூழலில் ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு சொந்​த​மான எம்டி அல் பஹி​யா, எம்டி மொம்​பாசா ஆகிய இரு எண்​ணெய் கப்​பல்​கள் நேற்று ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல முயன்​றன. இரு கப்​பல்​களி​லும் மாலுமிகள் உட்பட மொத்​தம் 46 ஊழியர்​கள் இருந்​தனர். அவர்​களில் 30 பேர் இந்​தி​யர்​கள் ஆவர்.

இந்த எண்​ணெய் கப்​பல்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் ஏவு​கணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் இரு கப்​பல்​களும் கடுமை​யாக சேதமடைந்​தன. இந்த தாக்​குதலில் ஓர் இந்​திய மாலுமி உயி​ரிழந்​தார். 10 இந்​திய மாலுமிகள் படு​கா​யம் அடைந்​தனர்.