இலங்கையில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம்!

இலங்கையில்  80 முக்கிய நீர்த்தேக்கங்கள், தமது கொள்ளளவில் 48 சதவீதமே நீரைக் கொண்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெரும்போக பருவ கால விவசாய செயற்பாடுகளுக்கும், அன்றாட ஏனைய நீர்த் தேவைகளுக்கும் தற்போதைய நீரின் அளவு போதுமானதாக இருக்கும் என அந்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், ‘எல் நினோ’ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி நிலை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த காலநிலை மாற்றத்தின் விளைவாக நீர் நிலைகளில் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதால், பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, கிடைக்கப்பெற்றுள்ள நீரை வீணடிக்காமல் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.