நீர்கொழும்பு சிறையில் இருந்த 200 கைதிகள் மீது கொலை குற்றச்சாட்டு

நீர்கொழும்பு சிறையில் எட்டு அதிகாரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சுமார் இருநூறு கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைச் சம்பவங்களில், ஒரு சிறைக்காவலர் உட்பட எட்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் நூறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின்படி, ‘சுரேஷ்’ மற்றும் ‘பூருமூனா’ உட்பட 13 முக்கிய குற்றவாளிகளால் இந்தக் குற்றம் நிகழ்த்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களைச் சரியாக அடையாளம் காண சிறையின் பாதுகாப்பு கெமரா (Camera) காட்சிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பல விசாரணைக் குழுக்கள் ஏற்கனவே ஆதாரங்களைச் சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதிகள் துப்பாக்கிகளையும் கொடிய ஆயுதங்களையும் எவ்வாறு பெற்றனர் என்பதில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

நீர்கொழும்பு சிறையின் ஆயுதக் கிடங்கின் பாதுகாப்பு குறித்தும் தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.