இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருடன் ஜே.வி.பி.பொதுச்செயலாளர் சந்திப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தரப்பினர் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுத்தமைக்கான தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் அவர் ஜே.வி.பியுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நாட்டை ஆட்சி செய்வதில் உள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் குறித்தும், நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தைப் பேணுவது குறித்தும் விரிவான கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பில் ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மத்திய குழு உறுப்பினர், சட்டத்தரணி ஜனக்க அதிகாரி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.