நெல்லுக்கு நியாய விலை கோரி கெகிராவாவில் வீதியில் இறங்கிய விவசாயிகள்

1000070258 நெல்லுக்கு நியாய விலை கோரி கெகிராவாவில் வீதியில் இறங்கிய விவசாயிகள்

அநுராதபுரம் கெகிராவாவில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கெக்கிராவ நகரில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றது.

இதன்போது நெல்லுக்கு நியாயமான விலை வழங்குதல், விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்களுக்கு உடனடித் தீர்வு காணுதல் மற்றும் விவசாயக் கொள்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.