இந்தியாவின் ‘நீலப் புரட்சி’

உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடான இந்தியாவின், கடலோரப் பகுதிகள் இல்லாத வடக்குப் பகுதி விவசாயிகள் இப்போது நீர்வாழ் உயிரின வளர்ப் பில் (aquaculture) ஈடு பட்டுள்ளனர்; இது இந்தியாவின் ‘நீலப் புரட்சி’யின் (Blue Revolution) ஒரு பகுதியாக நாட்டின் இறால் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்துள்ளது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி மதிப்பு 8.46 பில்லியன் டால ராக இருந்தது; இதில் இறால் ஏற்றுமதி மட்டும் 66% பங்களிப்பை அளித்துள்ளது.
முன்பு கோதுமை மற்றும் நெல் பயிரிட்ட விவசாயிகள், இப்போது கடலோரப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் கடல் நீர் போன்ற சூழலை உருவாக்க பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் அளவைச் சரியாகக் கையாண்டு வருகின்றனர்.
‘நீலப் புரட்சி’ என்பது உலகம் முழுவதும் மீன் வளர்ப்புத் துறையின் விரிவாக்கத்தைக் குறிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அந்த மாநிலம் 14,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான இறாலை உற்பத்தி செய்தது.
“நாங்கள் 8.5 ஏக்கர் நிலத்தில் சுமார் 93,000 டாலர் முதலீட்டுடன் இதைத் தொடங்கினோம். முதல் பருவத் திலேயே சுமார் 100,000 டாலர் மதிப்பிலான இறால்களை விற்பனை செய்து அந்தச் செலவு முழுவதையும் ஈடுசெய்துவிட்டோம்,” என்று சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறினார்.
இப்பண்ணைகளில் பிற வகை மீன்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு ஹரியானா 200,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கடல் உணவை உற்பத்தி செய்தது.
குளங்களை அமைக்கவும், உபகரணங்களை நிறுவவும் மற்றும் நவீன நீர்வாழ் உயிரின வளர்ப்பு முறைகளைக் கடைப்பிடிக்கவும் விவசாயிகளுக்கு அர சாங்கத்திடமிருந்து நிதி ஊக்கத்தொகைகளும் வழங்கப் படுகின்றன.