தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை கங்கரநேசன், சென்னை தமிழர் கட்சியின் தலைவர், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், சிரேஷ்ட சட்டத்தரணி சுபாஸ், சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜா காந்தீபன் மற்றும் கொள்கைப் பிரிவு செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



