சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்த புதிய சட்டம்!

சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடித் தொழில்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டமூலங்கள் இறுதி அனுமதிக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதன்படி ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படாதவாறு கடல் அட்டை பண்ணைகள் முறைப்படுத்தப்படும்.

காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கான பொருளாதார நிவாரணத் திட்டங்கள் தயாராகி வருகின்றன” என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்தகால அரசாங்கங்களை போலன்றி, தற்போதைய அரசு கடற்றொழிலாளர் வாழ்வாதாரத்திற்கு முதலிடம் வழங்கி நிலையான தீர்வை வழங்கும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.