தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு இளம் கலைஞர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகமும் சாவகச்சேரி தலைமையக காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.



