இலங்கை – அவுஸ்திரேலியா இடையே ஒப்பந்தம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குதல் மற்றும் வலுப்படுத்தும் வகையில் சிரச ஊடக வலையமைப்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் தேசிய ஊடக வலையமைப்பான Australian Broadcasting Corporation எனும் ABC அவுஸ்திரேலியா இடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் வர்த்தகம், கலை ஆக்கம் போன்ற மனித தொடர்புகளை மேம்படுத்தும் இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சிரச ஊடக வலையமைப்பு சார்பில் மகாராஜா ஊடக வலையமைப்பின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் மற்றும் ABC அவுஸ்திரேலியா சார்பில் அதன் சர்வதேச விவகாரங்கள் பிரிவின் பிரதானி Claire M.Gorman ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.