இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும்  காவல்துறையினரது சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆகியவற்றில் உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ளது.

துஷ்பிரயோகங்கள் தொடர்பான தெளிவான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், தற்போதைய சட்டக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் நீதித்துறையும், பாதுகாப்புத் துறையும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஆண்டுத்தோறும் சராசரியாக 10,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இடம்பெற்று வருகின்றது. கலாசாரம் மற்றும் ஆன்மீக விழுமியங்களுடன் பிணைந்துள்ள ஒரு நாட்டில் இத்தகைய புள்ளிவிபரம் பதிவாவது ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கப்படவேண்டிய விடயமாகும்.