புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இலங்கையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் மத விழாக்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாள் இம்முறை மே 28 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, விசேட தொழுகைகள் நடைபெறும் பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.



