வட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு நேற்று (22) அந்நாட்டு நேரப்படி இரவு 7.29 இற்கு ஷான்சி மாகாணத்தில், டோங்ஜோ குழுமத்திற்கு சொந்தமான லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் 247 ஊழியர்கள் அங்கு பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



